Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தாய்லாந்தில் மிக பழமையான திமிங்கலம் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

தாய்லாந்தில் மிக பழமையான திமிங்கலம் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

By: Nagaraj Sat, 28 Nov 2020 3:01:32 PM

தாய்லாந்தில் மிக பழமையான திமிங்கலம் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

மிக பழமையான திமிங்கலம் எலும்புக்கூடு... தாய்லாந்தில் 3,000 முதல் 5,000 ஆண்டுகள் பழமையான 39 அடி திமிங்கலத்தின் எலும்புக்கூடை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கண்டுபிடித்த இந்த திமிங்கலம் பிரைடின் வகையை சேர்ந்தவை என்றும் தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக் நகரின் மேற்கே உள்ள சாமுத் சாகோனில் கடற்கரையிலிருந்து 7.5 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

13-28 டன் எடை வரை வளரக்கூடிய பிரைடின் திமிங்கலங்கள் உலகளவில் வெப்பமண்டல மற்றும் வெப்பமான மிதமான கடல்களில் வாழ்கின்றன, அவை இன்றும் தாய்லாந்தைச் சுற்றியுள்ள நீரில் காணப்படுகின்றது.

Tags :
|
|