Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்று முதல் 4 நாட்கள் தீபாவளி விடுமுறை

ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்று முதல் 4 நாட்கள் தீபாவளி விடுமுறை

By: Monisha Thu, 12 Nov 2020 12:39:36 PM

ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்று முதல் 4 நாட்கள் தீபாவளி விடுமுறை

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பின்னர் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பள்ளிகளில், மாணவ- மாணவிகள் சேர்க்கை நடத்தப்பட்டது. அதேநேரம் பள்ளிகள் திறக்காத நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆன்லைன் மூலம் அனைத்து வகுப்பு மாணவர்களும் ஆர்வமுடன் கல்வி கற்று வருகின்றனர்.

online class,diwali,holidays,schools,students ,ஆன்லைன் வகுப்பு,தீபாவளி,விடுமுறை,பள்ளிகள்,மாணவர்கள்

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புக்கு இன்று முதல் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு இன்று முதல் 4 நாட்கள் தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 4 நாட்கள் தீபாவளி விடுமுறையின்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|