Advertisement

தி.மு.க. சார்பில் 16,000 கிராமசபை கூட்டங்களை நடத்த ஏற்பாடு

By: Monisha Sun, 20 Dec 2020 2:43:35 PM

தி.மு.க. சார்பில் 16,000 கிராமசபை கூட்டங்களை நடத்த ஏற்பாடு

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம், கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்கியது.

இக்கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட, மாநகர செயலாளர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டம் முடிந்ததும் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்பதால் ஏராளமான தொண்டர்கள் அண்ணா அறிவாலய வளாகத்தில் குவித்துள்ளனர்.

election,dmk,campaign,meeting,announcement ,தேர்தல்,திமுக,பிரச்சாரம்,கூட்டம்,அறிவிப்பு

கலந்துரையாடல் கூட்டத்தில் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகையில், தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு போர்க்குரலை அறிவிக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

டிசம்பர் 23-ம் தேதியில் இருந்து மு.க. ஸ்டாலின் நேரடி பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாகவும், இந்த பிரச்சாரத்தின்போது 16000 கிராமசபை கூட்டங்களையும் நடத்த விரும்புவதாகவும் துரைமுருகன் கூறினார்.

Tags :
|