Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிசம்பர் 2-ந் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்; கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தல்

டிசம்பர் 2-ந் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்; கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தல்

By: Monisha Sun, 29 Nov 2020 1:45:25 PM

டிசம்பர் 2-ந் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்; கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தல்

குமரி மாவட்ட மீனவர்கள் டிசம்பர் 2-ந் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேலும், வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேற்கு திசையில் நகர்ந்து வருகிற 2-ந் தேதி தென் தமிழகத்தை நோக்கி நகரக்கூடும்.

இதனால் இன்று மற்றும் நாளை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்றும் வீசக்கூடும். மேலும் டிசம்பர் 1-ந் தேதி தென்தமிழகத்தில், தென் மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார்வளைகுடா பகுதிகள், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

fishermen,sea,fishing,depression,hurricane ,மீனவர்கள்,கடல்,மீன்பிடிப்பு,காற்றழுத்த தாழ்வு மண்டலம்,சூறாவளி

டிசம்பர் 2-ந் தேதி தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் 50 முதல் 60 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.

எனவே, குமரி மாவட்ட மீனவர்கள் டிசம்பர் 2-ந் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தற்போது மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் நாளைக்குள் கரை திரும்புமாறும் கேட்டுக்கொள்ள படுகிறார்கள். மேலும், மீனவர்கள் தங்களது மீன்பிடிபடகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைப் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|