Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் தேர்தல் கமி‌ஷன் ஆலோசனை

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் தேர்தல் கமி‌ஷன் ஆலோசனை

By: Monisha Tue, 22 Dec 2020 2:55:43 PM

வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் தேர்தல் கமி‌ஷன் ஆலோசனை

மே மாதம் தமிழக சட்டசபையின் பதவி காலம் முடிவடைய உள்ளதால் அதற்கு முன்பாக சட்டசபை பொதுத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் கமி‌ஷன் தொடங்கி உள்ளது. தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கவும், அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்கவும், அதிகாரிகளுடன் ஆலோசிக்கவும் இந்திய தேர்தல் கமி‌ஷன் பொதுச்செயலாளர் உமேஷ் சின்கா தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் நேற்று சென்னை வந்தனர்.

இவர்கள் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஓட்டலில் நேற்று காலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து கருத்து கேட்டு அறிந்தனர். அப்போது தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று பல்வேறு கட்சியினர் மனு கொடுத்தனர். அதன் பிறகு தேர்தல் ஆணைய அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனைகள் மேற்கொண்டனர். கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் இணைந்து இந்த கூட்டம் நடத்தப்பட்டது. மேலும், இந்த கூட்டம் நேற்று இரவு வரை நீடித்தது.

assembly,election,consultation,meeting,polling station ,சட்டசபை,தேர்தல்,ஆலோசனை,கூட்டம்,வாக்குச்சாவடி

இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இன்று காலையிலும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் அமலாக்கத்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி, சென்னை போலீஸ் கமி‌ஷனர் மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் தேர்தல் நடத்தும் போது என்னென்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும், பதட்டமான தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள், வாக்குச்சாவடிகளில் என்னென்ன வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தேர்தலின்போது பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனைகள் மேற்கொண்டனர்.

Tags :