Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிகார் போல் தமிழகத்தில் தேர்தல் நடத்தக்கூடாது; திமுக வலியுறுத்தல்

பிகார் போல் தமிழகத்தில் தேர்தல் நடத்தக்கூடாது; திமுக வலியுறுத்தல்

By: Nagaraj Wed, 02 Dec 2020 08:36:46 AM

பிகார் போல் தமிழகத்தில் தேர்தல் நடத்தக்கூடாது; திமுக வலியுறுத்தல்

திமுக வலியுறுத்தல்... பிகார் தேர்தல் போல தமிழகத்தில் தேர்தலை நடத்தக்கூடாது என திமுக வலியுறுத்தியுள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்திலிருந்து அக்டோபர் 3ஆம் தேதி அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் பிகார் மாதிரி தேர்தல்களை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இத்தேர்தல் முறையின்படி வாக்குச்சாவடி அதிகாரிகள், முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் வாக்குச் சீட்டுகளை அளித்து, அவர்களது வாக்குகளைப் பெற்று, பின்னர் உரிய அதிகாரிகளிடம் அளிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளதென திமுக பொருளாளரும், மக்களவை குழுத் தலைவருமான டி. ஆர். பாலு, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அதில், நியாயமான மற்றும் ஒளிவு மறைவற்ற தேர்தல் முறைக்கு முற்றிலும் எதிரானதோடு, போலி வாக்காளர்களை அதிகப்படுத்தியும், அதிகாரிகளை தவறாக பயன்படுத்தவும் மற்றும் அரசியல் கட்சிகளிடையே சமமற்ற நிலையையும் உருவாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் என்ற வார்த்தை தேர்தல் நடத்தை விதிகளில் துல்லியமாக வரையறுக்கப்படாத நிலையில், தபால் வாக்குச் சீட்டுகள் அளிக்கும், தேர்தல் பொறுப்பு அதிகாரி தனது அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

dmk insistence,election commission,letter,circular ,திமுக வலியுறுத்தல், தேர்தல் ஆணையம், கடிதம், சுற்றறிக்கை

முதியோர்கள் என்பவர்களுடைய வயதினை கணக்கிட எந்த துல்லியமான வரையறையும் தேர்தல் விதிகளில் குறிப்பிடப்படாத நிலையில், தபால் வாக்குச் சீட்டுகள் அளிக்கும், தேர்தல் பொறுப்பு அதிகாரி தனது அதிகாரத்தை, நியாயமான மற்றும் ஒளிவு மறைவற்ற தேர்தல் முறைக்கு முற்றிலும் எதிராக பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது” எனவும் தெரிவித்துள்ளார்.

ஓட்டளிக்க வராத வாக்காளர்களுக்கு, தபால் வாக்குச் சீட்டுகள் அளிக்கப்பட்டால், அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவர்கள் இல்லாத நிலையில், போலி வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகளவில் பெருக வாய்ப்பு உள்ளதாக குற்றம்சாட்டியதோடு, இந்திய தேர்தல் ஆணையத்தின் சுற்றறிக்கையை வெளியிடும் முன், அனைத்து அரசியல் கட்சிகள், சம்மந்தப்பட்ட பயனாளிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள் ஆகியோர்களுடன் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக வெளியிடப்பட்டது, தேர்தல் ஆணைத்தின் நோக்கத்தை சந்தேகத்திற்குள்ளாக்கிறது.

மேலும், இந்த சுற்றறிக்கை அனைத்து பயனாளிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்க மறுப்பதோடு, நியாயமான மற்றும் ஒளிவு மறைவற்ற தேர்தல் முறைக்கு முற்றிலும் எதிராக அரசு எந்திரத்தை பயன்படுத்தும் வழிமுறைகளை அதிகரித்துள்ளது. ஆகவே, சுற்றறிக்கையை ரத்துசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும், சம்மந்தப்பட்ட பயனாளிகளுடனும் கலந்தாலோசித்து, சிறந்த தீர்வைக் காணவும், நியாயமான மற்றும் ஒளிவு மறைவற்ற தேர்தல் முறையை உறுதிப்படுத்தவும், மற்றும் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கவும் அவர் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags :
|