Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • என்னிடம் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்; குஷ்பூவின் சூசக டுவிட்

என்னிடம் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்; குஷ்பூவின் சூசக டுவிட்

By: Nagaraj Mon, 12 Oct 2020 10:04:00 AM

என்னிடம் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்; குஷ்பூவின் சூசக டுவிட்

குஷ்பூ பாஜவில் இணைய போகிறார் என்ற தகவல் உலா வந்து கொண்டு இருக்கும் நிலையில் சூசகமாக அது உண்மைதான் என்பதை உறுதிபடுத்துகிறது அவரது டுவிட்டர் பதிவு என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

கடந்த சில வாரங்களாக நடிகையும். காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக வதந்திகள் பரவி வந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமித்ஷாவுக்கு தனது டுவிட்டரில் நலம் பெற வேண்டும் என்று கூறினார். மத்திய அரசின் புதிய கல்வித் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் அவர் பாஜகவில் சேர இருப்பதாக கூறப்பட்டது.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த நடிகை குஷ்பு சமீபத்தில் சென்னையில் நடந்த காங்கிரஸ் கட்சியை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது காங்கிரஸை கடுமையாக சாடினார். ரூபாய் இரண்டு வாங்கி விட்டு டுவிட் செய்பவர்கள் தான் இவ்வாறு வதந்தியை கிளப்பி வருவதாகவும் அவர் கூறினார்.

actress khushboo,post,twitter,change,bjp ,நடிகை குஷ்பூ, பதிவு, டுவிட்டர், மாற்றம், பாஜக

இந்நிலையில் நேற்று குஷ்பூ பாஜகவில் இணைய இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. அதற்கேற்ப விமான நிலையத்தில் செய்தியாளர்கள் குஷ்புவிடம் நீங்கள் பாஜகவில் இணைய போகிறீர்களா? என்று கேட்டதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என்று மட்டும் பதில் அளித்து விட்டு கடந்தார்.

தொடர்ந்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு ட்விட் போட்டு பரபரப்பை கூட்டியுள்ளார். அந்த பதிவில், பலர் என்னிடம் ஒரு மாற்றத்தை பார்க்கின்றனர். வயதிற்கு ஏற்ப நமது வளர்ச்சியும் மாற்றமும் இருக்கும். கற்றவை மற்றும் கற்காதவை, உணர்வுகளின் மாற்றம், பிடித்தவை மற்றும் பிடிக்காதவை, எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் ஆகியவை ஒரு புதிய வடிவத்தைக் கொடுக்கும்.

கனவுகள் புதியவை. லைக்குக்கும் லவ்வுக்கும் வித்தியாசம் இருப்பதை போல, சரிக்கும் தவறுக்கும் வித்தியாசம் இருப்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. மாற்றம் தவிர்க்க முடியாதது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். இதனால் குஷ்பூ இன்று பாஜகவில் இணைவதை மறைமுகமாகவே தன் பதிவில் சொல்லிவிட்டார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Tags :
|
|