Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மருத்துவ கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

மருத்துவ கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

By: Monisha Wed, 28 Oct 2020 10:51:45 AM

மருத்துவ கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ். ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற நவம்பர் 2-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர மாணவர்கள் சென்டாக் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதற்கான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் சென்டாக்கிற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற நவம்பர் 2-ந்தேதி வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்டாக் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

puducherry,medical college,sentak,neet exam,student admission ,புதுச்சேரி,மருத்துவ கல்லூரி,சென்டாக்,நீட் தேர்வு,மாணவர் சேர்க்கை

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. மேலும் விடுமுறைகள் காரணமாக உரிய சான்றிதழ்களை பெறுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நீட் அடிப்படையிலான படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ். ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு வருகிற நவம்பர் 2-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|