Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒடிசா மாநிலத்தில் வரும் நவம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

ஒடிசா மாநிலத்தில் வரும் நவம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

By: Nagaraj Sat, 31 Oct 2020 7:10:07 PM

ஒடிசா மாநிலத்தில் வரும் நவம்பர் 30ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

பொது முடக்கம் நீட்டிப்பு... கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஒடிசா மாநிலத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நவம்பர் 30ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனினும் மாநில தொற்றுப் பரவல் நிலைகளுக்கேற்ப அவ்வப்போது பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன.

corona,odisha,extension,general freeze,students ,கொரோனா, ஒடிசா, நீட்டிப்பு, பொதுமுடக்கம், மாணவர்கள்

இந்நிலையில் ஒடிசா மாநில அரசு மாநிலத்தில் உள்ள கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பொதுமுடக்கத்தை நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் நவம்பர் 30ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களும் மூடப்படும் எனத் தெரிவித்துள்ள வேளையில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் 16ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளது.

ஒடிசா மாநிலத்தில் இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரத்து 116 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|