Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து போராடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு

டெல்லியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து போராடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு

By: Karunakaran Sun, 13 Dec 2020 12:15:18 PM

டெல்லியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து போராடப்போவதாக விவசாயிகள் அறிவிப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியிலும், டெல்லி எல்லைப்புற சாலைகளிலும் தொடர்ந்து விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 18-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்த நிலையில், விவசாய சங்கங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளன.

வேளாண் சட்டங்களில் மத்திய அரசு கொண்டு வரும் திருத்தங்களை விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டனர். டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை தடுத்து நேற்று மறியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர். இதற்காக டெல்லி நோக்கி ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களில் அணி அணியாக விரைந்தனர்.

farmers,main highways,delhi,agricultural laws ,விவசாயிகள், பிரதான நெடுஞ்சாலைகள், டெல்லி, விவசாய சட்டங்கள்

சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் இன்று மறியல் போராட்டம் நடக்க வாய்ப்பு உள்ளதால், நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு பல அடுக்கு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் டெல்லியை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து போராடப்போவதாகவும், நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் கூறி உள்ளனர். எனவே, டெல்லியின் மற்ற எல்லைப்பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.



Tags :
|