Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறத்தையும் முடக்கிய விவசாயிகள்

உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறத்தையும் முடக்கிய விவசாயிகள்

By: Karunakaran Tue, 22 Dec 2020 1:02:20 PM

உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறத்தையும் முடக்கிய விவசாயிகள்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா, உத்தரபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொறுபடுத்தாமல் டெல்லி மற்றும் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் இன்று 27-வது நாளை எட்டியுள்ளது.

விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு மாநிலங்களிலும் விவசாய சங்கத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேசம் மற்றும் டெல்லியை இணைக்கும் எல்லைப்பகுதியான காசியாபாத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையிலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

farmers,block,national highway,delhi ,விவசாயிகள்,முடக்கம், தேசிய நெடுஞ்சாலை, டெல்லி

தொடக்கத்தில் டெல்லி-காசியாபாத் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு புறத்தை மட்டுமே மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி விவசாயிகள் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து வருகிறது. இதனால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர். அதன்படி, டெல்லி-காசியாபாத் எல்லையில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பக்கத்தில் மட்டும் போராட்டம் நடத்திவந்த விவசாயிகள் இன்று சாலையின் இரு புறத்தையும் முடக்கியுள்ளனர்.

சாலையின் இருபுறமும் முடக்கப்பட்டதால் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்தின் காசியாபாத் வழியாக பிற மாநிலங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்தும் தடைபட்டுள்ளது. இந்த போராட்டத்தால், டெல்லி-மீரட் சாலை, டெல்லி-காசியாபாத் சாலை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் டெல்லி எல்லையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Tags :
|