Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டெல்லி புராரி மைதானத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள்

டெல்லி புராரி மைதானத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள்

By: Karunakaran Sun, 27 Dec 2020 5:15:19 PM

டெல்லி புராரி மைதானத்தில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகள்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் நடத்தி வரும் போராட்டம் ஒரு மாதத்தை கடந்து விட்டது. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் கோரிக்கையில் உறுதியாக இருக்கும் விவசாயிகள், கொரோனா அச்சுறுத்தல், கடுமையான குளிர் போன்ற சவால்களை கருத்தில் கொள்ளாமல், டெல்லியின் எல்லைகளை ஆக்கிரமித்துள்ளனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தைகள் எந்தவித பலனையும் தரவில்லை. குறிப்பாக வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளும் மத்தியஅரசின் யோசனையை விவசாயிகள் நிராகரித்து விட்டார்கள். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைப் பகுதிகளில் 32வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

farmers,onions cultivate,purari ground,delhi ,விவசாயிகள், வெங்காயம் சாகுபடி, புராரி மைதானம், டெல்லி

ஒரு குழுவினர் டெல்லி புராரி மைதானத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், புராரி மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் தேவைக்கு அந்த மைதானத்திலேயே வெங்காய சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மைதானத்தின் ஒரு பகுதியில், வெங்காய நாற்றுகளை நடவு செய்துள்ளனர். அதற்கு தேவையான தண்ணீரை தெளிக்கின்றனர்.

ஒரு மாத காலமாக விவசாயம் செய்யாமல் இருப்பதால், தங்களது சமையல் தேவைக்காக மைதானத்தில் வெங்காய சாகுபடி செய்திருப்பதாகவும், மேலும் சில பயிர்களை பயிரிட திட்டமிட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags :