Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரஷ்ய கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி

ரஷ்ய கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி

By: Nagaraj Sat, 17 Oct 2020 10:38:26 PM

ரஷ்ய கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி

மத்திய அரசு அனுமதி... ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனையை, இந்தியாவில் நடத்த மத்திய அரசு அனுமதித்து உள்ளது.

உலக மக்களின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்துள்ள, உயிர்க்கொல்லியான கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, முறைப்படியான பரிசோதனைகள் நடந்து வருகின்றன.

இந்தியாவிலும், உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின், ஆக்ஸ்போர்ட் நிறுவனத்தின் தடுப்பூசி போன்றவற்றின் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உலகின் முதல் கொரோனா தடுப்பூசியாக அறிவிக்கப்பட்ட ரஷியாவின், ஸ்புவுட்னிக்-V தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதனை செய்ய, தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார். 2/3 எனும் விகிதத்தில் மனிதர்கள் மீதான பரிசோதனைகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

federal government,permit,corona,vaccine,test ,மத்திய அரசு, அனுமதி,  கொரோனா, தடுப்பூசி, பரிசோதனை

இந்த தடுப்பூசி உற்பத்திக்கான ஒப்பந்தத்தை ரஷியாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன், ஹைதராபாத்தை சேர்ந்த ரெட்டி லெபோரட்ரிஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஷியாவின் தடுப்பூசியான ஸ்புட்னிக்-V மீதான பரிசோதனைகள் சிறிய அளவில் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதனை வைத்து இதன் திறன் மற்றும் பாதுகாப்பை மதிப்பிட முடியாது என்று வல்லுநர்கள் தெரிவித்தாலும், இந்த மருந்து நோய்த்தொற்றுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக லான்செட் இதழ் குறிப்பிட்டுள்ளது.

Tags :
|
|