Advertisement

பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்- தெற்கு ரயில்வே

By: Monisha Wed, 09 Dec 2020 10:26:52 AM

பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கம்- தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே, தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக பண்டிகை கால சிறப்பு ரயில்களை இயக்குகிறது. அதன்படி, ராமேசுவரம்-புவனேசுவர், ராமேசுவரம்-ஓகா, நாகர்கோவில்-மும்பை ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கவுள்ளது. இதில், புவனேசுவரத்தில் இருந்து இயக்கப்படும் பண்டிகை கால சிறப்பு ரயில்(வ.எண்.08496) வருகிற 11-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் புறப்படும். இந்த ரயில் புவனேசுவரில் இருந்து மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் இரவு 10.35 மணிக்கு ராமேசுவரம் ரயில் நிலையம் வந்து சேரும். மறுமார்க்கத்தில் ராமேசுவரத்தில் இருந்து வருகிற 13-ந் தேதி முதல் வருகிற 27-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்(வ.எண்.08495 ) ராமேசுவரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 8.50 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை மாலை 6.10 மணிக்கு புவனேசுவரம் ரயில் நிலையம் சென்றடைகிறது.

ராமேசுவரத்திலிருந்து மதுரை வழியாக குஜராத் மாநிலம் ஓகா கோட்டைக்கு வருகிற 11-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்(வ.எண்.06733) ராமேசுவரத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1.10 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. திங்கட்கிழமை காலை 10.20 மணிக்கு ஓகா கோட்டை ரயில் நிலையம் சென்று சேரும். மறுமார்க்கத்தில் ஓகா கோட்டையில் இருந்து வருகிற 15-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்(வ.எண்.06734) ஓகாவில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 8.40 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை மாலை 3.50 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. இரவு 7.15 மணிக்கு ராமேசுவரம் ரயில் நிலையம் வந்தடைகிறது.

festival,special train,passenger,express,announcement ,பண்டிகை,சிறப்பு ரயில்,பயணிகள்,எக்ஸ்பிரஸ்,இயக்கம்

நாகர்கோவிலிலிருந்து மதுரை வழியாக மும்பைக்கு வருகிற 13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்(வ.எண்.06352) நாகர்கோவிலில் இருந்து மேற்கண்ட நாட்களில் காலை 6.00 மணிக்கு புறப்பட்டு காலை 11.05 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் இரவு 7.15 மணிக்கு மும்பை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் மும்பையிலிருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 14-ந் தேதி முதல் அடுத்த மாதம் 1-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை மற்றும் திங்கட்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்(வ.எண்.06351) மும்பையிலிருந்து மேற்கண்ட நாட்களில் இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. காலை 7.30 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றடைகிறது.

Tags :