Advertisement

புதுச்சேரி ஒயர் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து

By: Nagaraj Sat, 03 Oct 2020 4:09:58 PM

புதுச்சேரி ஒயர் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து

ஒயர் தயாரிப்பு தொழிற்சாலையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.

புதுச்சேரியில் தனியார் ஒயர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் ரோகித் கார்ப்பரேஷனின் Siecham என்கிற ஒயர் (Cable) தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

fire,pondicherry,wire damage,firefighters ,தீவிபத்து, புதுச்சேரி, ஒயர் தமாரிப்பு, தீயணைப்பு வீரர்கள்

இன்று காலை இங்குள்ள ஒயர் தயாரிக்கும் எந்திரத்தில் மின்கசிவினால் பற்றிய தீ மளமளவென பல்வேறு இயந்திரங்களிலும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் புதுச்சேரி, வில்லியனூர், கோரிமேடு, சேதராப்பட்டு பகுதிகளிலிருந்து ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags :
|