Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து

By: Karunakaran Thu, 17 Sept 2020 1:07:00 PM

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து

பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுதால் நாடு முழுவதும் பாஜகவினர் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், வெளிநாடுகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, ஜிதேந்திர சிங் உள்பட பலர் டுவிட்டரில் வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளனர். மேலும், ரஷிய அதிபர் புதின், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி உள்ளிட்ட உலக தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

congress,rahul gandhi,prime minister modi,birthday ,காங்கிரஸ் ,ராகுல் காந்தி, பிரதமர் மோடி, பிறந்த நாள்

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பிரதமர் மோடிஜி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டும் பிரதமருக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 14 தொடங்கிய இந்த சேவை வாரம் 20 ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த சேவை வார விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் போன்ற பணிகள் நடைபெறுகின்றன.

Tags :