Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரான்ஸ் நாடு கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை - அதிபர் மெக்ரான்

பிரான்ஸ் நாடு கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை - அதிபர் மெக்ரான்

By: Karunakaran Tue, 27 Oct 2020 1:55:13 PM

பிரான்ஸ் நாடு கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை - அதிபர் மெக்ரான்

பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் புறநகர் பகுதியான கன்ஃபன்ஸ்-செயிண்டி-ஹனோரின் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்த சாமுவேல் பெடி, கடந்த 5-ம் தேதி தனது வகுப்பில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியுள்ளார். அப்போது அந்த வகுப்பில் படித்துவந்த ஒரு மாணவனின் பெற்றோர் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை காட்டக்கூடாது என சாமுவேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் பள்ளிக்கூடம் அருகே கடந்த 16-ம் தேதி மாலை நடந்து சென்று கொண்டிருந்த சாமுவேல் பெடியை பின் தொடர்ந்து வந்த 18 வயது இளைஞன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு சாமுவேலின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் ரஷியாவில் உள்ள சிசன்ஸ் பகுதியை பூர்வீகமாக கொண்டு பிரான்சில் வசித்து வரும் 18 வயது இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

france,caricatures,macron,prophet muhammad ,பிரான்ஸ், கேலிச்சித்திரங்கள், மெக்ரான் , நபிகள் நாயகம்

ஆசிரியர் கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இந்த தாக்குதல் ‘இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்’ என கூறினார். மேலும், ’ஆசிரியர்களுக்கு பிரான்ஸ் துணைநின்று பாதுகாக்கும்’ என கூறியிருந்தார். இந்நிலையில், நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை காட்டியதால் தலைதுண்டித்து கொல்லப்பட்ட சாமுவேலின் அஞ்சலி நிகழ்ச்சியில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் பங்கேற்றார்.

அப்போது பேசிய இம்மானுவேல், பிரான்ஸ் நாடு அதன் சுதந்திரத்தை கைவிடாது. கேலிச்சித்திரங்கள் வெளியிடுவதை கைவிடப்போவதில்லை. இஸ்லாமிய மதவாதிகளுக்கு நமது எதிர்காலம் ஒருபோதும் கிடைக்காது என்று கூறினார். இதனால் உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் பிரான்ஸ் அதிபரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இஸ்லாமிய நாடுகளில் பிரான்ஸ் நாட்டின் பொருட்களை புறக்கணிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

Tags :
|
|