Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய வருவாய் மாவட்டம் அமைக்க கோரி கும்பகோணத்தில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்

புதிய வருவாய் மாவட்டம் அமைக்க கோரி கும்பகோணத்தில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்

By: Nagaraj Fri, 17 July 2020 3:10:39 PM

புதிய வருவாய் மாவட்டம் அமைக்க கோரி கும்பகோணத்தில் இன்று முழு கடையடைப்பு போராட்டம்

இன்று முழு கடையடைப்பு போராட்டம்... கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் வட்டத்தில் முழு கடையடைப்பு நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் வட்டங்களை பிரித்து, கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நாச்சியார்கோவில், திருப்பனந்தாள், அம்மாப்பேட்டை ஆகிய ஊர்களை பிரித்து புதிய தாலுகாக்களை உருவாக்கிட வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கைளை தமிழக அரசுக்கு வலியுறுத்தி வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, கும்பகோணத்தை மாவட்டமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு 2 லட்சம் தபால் அட்டைகளை கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து போராட்டக்குழுவினர் அனுப்பினர்.

traders,protest,kumbakonam,complete closure ,வர்த்தகர்கள், போராட்டம், கும்பகோணம், முழு கடையடைப்பு

பின்னர் அனைத்து அரசியல் கட்சியின் பிரதிநிதிகளை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு கேட்டனர். தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சியினர், இயக்கங்கள், தன்னார்வ அமைப்புகள், வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.

இந்நிலையில், கும்பகோணம் கோட்டத்துக்குட்பட்ட கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் ஆகிய வட்டங்களில் முழு கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி மூன்று வட்டங்களிலும் 15 ஆயிரம் கடைகளை இன்று (ஜூலை 17) மூடி வர்த்தகர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

Tags :