Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாக அரசு தகவல்

லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாக அரசு தகவல்

By: Nagaraj Fri, 09 Oct 2020 4:03:52 PM

லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாக அரசு தகவல்

லிபியாவில் கடத்தப்பட்ட ஏழு இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் மத்தியில் சற்றே ஆறுதலை அளித்துள்ளது.

லிபியாவில் கடத்தப்பட்ட ஏழு இந்தியர்களின் பாதுகாப்பான விடுவிப்புக்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் கடத்தப்பட்ட ஏழு இந்தியர்களின புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

federal government,notification,foreign affairs,abductors,airport ,மத்திய அரசு, அறிவிப்பு, வெளியுறவு, கடத்தப்பட்டவர்கள், விமான நிலையம்

ஏழு பேரும் ஆந்திரா, பீகார், குஜராத் மாநிலங்களை சேர்ந்தவர்கள். கடந்த மாதம் இறுதியில் இந்த ஏழு பேரும் தாங்கள் பணிபுரியும் கட்டுமான நிறுவனத்தில் இருந்து இந்தியா திரும்புவதற்கான விமான நிலையம் செல்லும் வழியில் கடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட 7 பேரும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் கடத்தப்பட்டவர்களின் குடும்பத்திற்கு சற்றே ஆறுதலை அளித்துள்ளது. விரைந்து செயல்பட்டு கடத்தப்பட்டவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :