Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரைவேக்காடு சீமான்; அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் விமர்சனம்

அரைவேக்காடு சீமான்; அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் விமர்சனம்

By: Nagaraj Sat, 26 Dec 2020 09:44:22 AM

அரைவேக்காடு சீமான்; அமைச்சர் கடம்பூர் ராஜு கடும் விமர்சனம்

அமைச்சர் விமர்சனம்... சீமான் ஒரு அரைவேக்காடு என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று தூத்துகுடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மரியாதை செலுத்தினார். அதோடு, எம்.ஜி.ஆரின் நினைவு நாளுக்காக மொட்டை போட்டுக் கொண்ட அதிமுகவினருக்கு வேஷ்டி சட்டைகளை வழங்கினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், 'எம்.ஜி.ஆரை தமிழக மக்கள் தெய்வமாக வணங்குகிறார்கள்.

minister,seaman,criticism,halfway,worship ,
அமைச்சர், சீமான், விமர்சனம், அரைவேக்காடுகள், வணங்குகிறார்கள்

அவரை பழித்துப்பேசுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. 'எம்.ஜி.ஆர் பற்றி பேச சீமானுக்கு எந்த அருகதையும் இல்லை. அவரை போன்ற அரைவேக்காடுகள் தான் ரகளையை கிளப்ப வாய்க்கு வந்தபடி பேசுவார்கள்.

பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பிடித்தாரா என்றே தெரியவில்லை. எல்லா மக்களுக்கும் தெரிந்திருக்கும் விஷயம் கூட அவருக்கு தெரியாதது கிடையாது.

மேலும், சொத்து குறித்து வெள்ளை அறிக்கை விட தான் தயாராக இருக்கிறேன். கமல்ஹாசன் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? என்று சவால் விட்டு பேசினார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

Tags :
|