Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நான் இந்த இடத்தில் இருப்பதற்கு பொறுப்பாக செயல்பட்டவர் என் அம்மா - கமலா ஹாரிஸ்

நான் இந்த இடத்தில் இருப்பதற்கு பொறுப்பாக செயல்பட்டவர் என் அம்மா - கமலா ஹாரிஸ்

By: Karunakaran Mon, 09 Nov 2020 12:11:27 PM

நான் இந்த இடத்தில் இருப்பதற்கு பொறுப்பாக செயல்பட்டவர் என் அம்மா - கமலா ஹாரிஸ்

உலகின் வல்லரசு நாடான அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணி, முடிவை அறிவிப்பதில் இருந்த இழுபறி நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. அதிபர் தேர்தலில் 77 வயது ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றிருக்கிறார். துணை ஜனாதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 56 வயது கமலா ஹாரிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையொட்டி கமலா ஹாரிஸ், டெலவாரே மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் வெற்றி உரை ஆற்றினார்.

அப்போது அவர் தமிழ்நாட்டின் மன்னார்குடி பகுதியை சேர்ந்த தனது தாயார் சியாமளா கோபாலனை உருக்கமுடன் நினைவுகூர்ந்தார். வில்மிங்டன் நகரில் அவர் உரையாற்றுகையில், அமெரிக்க மக்களே, நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போட்டிருக்கலாம். கவலை இல்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு எவ்வாறு விசுவாசமான, நேர்மையான, தயார்நிலையிலான துணை ஜனாதிபதியாக ஒவ்வொரு நாளும் உங்களைப்பற்றியும், உங்கள் குடும்பங்களைப் பற்றியும் சிந்தித்தவாறே கண்விழித்த ஜோ பைடனைப்போன்று நானும் இருக்க முயற்சிப்பேன் என்று கூறினார்.

america,mother,kamala harris,vice president ,அமெரிக்கா, தாய், கமலா ஹாரிஸ், துணைத் தலைவர்

மேலும் அவர், இந்த நம்ப முடியாத பயணத்தில் எங்கள் குடும்பத்தை அவர்களிடம் வரவேற்ற ஜோ பைடனுக்கும், ஜில் பைடனுக்கும் நாங்கள் மிகவும் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். இன்று நான் இந்த இடத்தில் இருப்பதற்கு மிகவும் பொறுப்பாக செயல்பட்ட பெண்மணி எனது அம்மா சியாமளா கோபாலன். என் அம்மா எப்போதும் எங்கள் இதயத்தில் வீற்றிருக்கிறார். நமது நாட்டின் முக்கியமான தடைகளில் ஒன்றை உடைத்து ஒரு பெண்ணை நாட்டின் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கான துணிச்சல், ஜோ பைடனுக்கு இருந்தது என்பது ஜோ பைடனின் அற்புதமான தன்மைக்கு அருமையான சான்று என தெரிவித்தார்.

இந்த இரவில் இதைக் கவனிக்கிற ஒவ்வொரு சிறுமியும் இந்த நாடு, சாத்தியங்களுக்கான நாடு என்பதை பார்க்கிறார்கள். உண்மையான பணி இப்போது தொடங்குகிறது. கடின உழைப்பு தேவைப்படுகிறது. நமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு, உழைக்கும் மக்களுக்காக வேலை செய்ய வேண்டியதிருக்கிறது. நமது நாட்டை ஒற்றுமைப்படுத்தவும், நம் தேசத்தை குணப்படுத்தவும் வேலை செய்ய வேண்டியதிருக்கிறது. நாம் கடந்து செல்லவேண்டிய பாதை எளிதானது அல்ல. ஆனால் அமெரிக்கா அதை சந்திக்க தயாராக இருக்கிறது. அதே போன்று ஜோ பைடனும், நானும் தயாராக இருக்கிறோம் என கமலா ஹாரிஸ் பேசினார்.

Tags :
|