Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் மேலிடம் மன்னித்தால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை வரவேற்க தயார் - அசோக் கெலாட்

காங்கிரஸ் மேலிடம் மன்னித்தால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை வரவேற்க தயார் - அசோக் கெலாட்

By: Karunakaran Sun, 02 Aug 2020 6:07:03 PM

காங்கிரஸ் மேலிடம் மன்னித்தால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை வரவேற்க தயார் - அசோக் கெலாட்

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், அசோக் கெலாட்டுக்கு எதிராக செயல்பட்ட சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதல்-மந்திரி பதவி பறிக்கப்பட்டது. மேலும், சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேருக்கும் சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க ராஜஸ்தான் ஐகோர்ட்டு தடை விதித்தது. இதனால் சச்சின் பைலட் உதவியுடன் ராஜஸ்தான் அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது, சட்டசபை கூட்டத் தொடர் வரும் 14-ந் தேதி தொடங்குகிறது.

congress,disgruntled mla,ashok gehlot,forgive ,காங்கிரஸ், அதிருப்தி எம்.எல்.ஏ, அசோக் கெஹ்லோட், மன்னிப்பு

இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை, முதல்-மந்திரி அசோக் கெலாட் ஜெய்சல்மார் நகருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள ஓட்டலில் தங்கவைத்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜக இழுத்து விட கூடாது என்பதற்காக அவர் இவ்வாறு செய்துள்ளார்.

அப்போது அசோக் கெலாட் அளித்த பேட்டியில், எங்களுக்கு யாருடனும் சண்டை கிடையாது. ஜனநாயகத்தில் கொள்கைகளுக்காக, திட்டங்களுக்காக மோதல்கள் ஏற்படுவது வழக்கமானதுதான். ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசை கவிழ்க்க நடக்கும் முயற்சியை பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும். காங்கிரஸ் மேலிடம் விரும்புவதை செய்ய நான் தயாராக இருக்கிறேன். கட்சி மேலிடம் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மன்னித்தால் அவர்களை வரவேற்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

Tags :