Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு திறப்பு

பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு திறப்பு

By: Nagaraj Sat, 05 Dec 2020 2:02:28 PM

பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு திறப்பு

நீர் திறப்பு அதிகரிப்பு... பூண்டி ஏரியில் இருந்து நீர் திறப்பு 6,073 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை பொதுமக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கி வருவது திருவள்ளூர் அருகே பூண்டி ஏரியாகும். இந்த நிலையில் திருவள்ளூர் பகுதியில் வியாழக்கிழமை இரவு முதல் தொடர்ந்து வெள்ளிக்கிழமை வரை விடாமல் சாரல் மழை பெய்தது.

பூண்டி ஏரிக்கான வரத்துக் கால்வாய் மற்றும் கிருஷ்ணா நீர் வரத்து ஆகியவைகளின் வரத்து காரணமாக 4600 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது.

boondi lake,conservation,surplus water,opening,increase ,பூண்டி ஏரி, பாதுகாப்பு, உபரி நீர், திறப்பு, அதிகரிப்பு

இதனால் ஏரி, 35 அடி உயரம் கொண்டதாகும். இதில் 3,231 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்கலாம். தற்போதைய நிலையில் பூண்டி ஏரியில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி நீர்மட்டம் 34.19 அடி உயரமும், 2889 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

இந்த நிலையில் ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை 6 மதகுகள் வழியாக 4300 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டது. தற்போது இது 6,073 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Tags :