Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னை மாநகராட்சியில் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை உயர்வு

சென்னை மாநகராட்சியில் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை உயர்வு

By: Nagaraj Tue, 21 July 2020 11:20:03 AM

சென்னை மாநகராட்சியில் கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை உயர்வு

கொரோனா பரிசோதனை எண்ணிக்கை....சென்னையில், மாநகராட்சி சார்பில் நாளொன்றுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுவோர் எண்ணிக்கை 14,030 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தின் பிற மாவட்டங்களைவிட சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. இதை கட்டுப்படுத்த, நாளொன்றுக்கு எத்தனை தொற்று கண்டுபிடிக்கப்படுகிறதோ, அதைவிட 10 மடங்கு பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.

இதைத் தொடர்ந்து சென்னையில் படிப்படியாக பரிசோதனை எண்ணிக்கை உயர்த்தப்பட்டு வந்தது. கடந்த 4-ம் தேதி இந்த பரிசோதனை எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது. புதியஉச்சமாக 19-ம் தேதி ஒரே நாளில்14,030 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

experiment,number,rise,corporation,chennai ,பரிசோதனை, எண்ணிக்கை, உயர்ந்தது, மாநகராட்சி, சென்னை

பரிசோதனைகள் அதிகரித்ததன் காரணமாக சென்னையில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையில் இதுவரை 5 லட்சம் பேருக்கு மேல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.200 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஜூலை 19 நிலவரப்படி புதிய தொற்று 1,254 ஆக குறைந்துள்ளது. இதுவரை 85 ஆயிரத்து 859 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் 69 ஆயிரத்து 382 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 15 ஆயிரத்து42 பேர் (17.59 சதவீதம்) சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 1,434 பேர் (1.61 சதவீதம்) உயிரிழந்துள்ளனர். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Tags :
|
|