Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழையின் காரணமாக குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மழையின் காரணமாக குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

By: Monisha Fri, 13 Nov 2020 3:48:22 PM

மழையின் காரணமாக குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்றிரவு மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 12.4 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழை பெய்ததையடுத்து தீபாவளி பண்டிகைக்கு கடை வீதிக்கு வந்திருந்த பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள். கோட்டார் சாலை உள்பட பல்வேறு சாலைகள் மழை வெள்ளத்தினால் சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது.

கொட்டாரம், மயிலாடி, தக்கலை இரணியல், மார்த்தாண்டம் பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. திற்பரப்பு அருவி பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

rain,dams,diwali,public,floods ,மழை,அணைகள்,தீபாவளி,பொதுமக்கள்,வெள்ளம்

மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.20 அடியாக உள்ளது. அணைக்கு 615 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 727 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 69.10 அடியாக உள்ளது. அணைக்கு 225 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 380 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 15.05 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 15.16 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 16.40 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 44.51 அடியாகவும் உள்ளது.

Tags :
|
|
|
|