Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராயக்கோட்டை பகுதியில் கொரோனா பரவல் அதிகரிப்பு; கடைகளை மூட வணிகர்கள் முடிவு

ராயக்கோட்டை பகுதியில் கொரோனா பரவல் அதிகரிப்பு; கடைகளை மூட வணிகர்கள் முடிவு

By: Monisha Mon, 28 Sept 2020 4:37:59 PM

ராயக்கோட்டை பகுதியில் கொரோனா பரவல் அதிகரிப்பு; கடைகளை மூட வணிகர்கள் முடிவு

ராயக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 28 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 22 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

எச்சம்பட்டி, உடையாண்டஅள்ளி, கோட்டை ஆகிய பகுதியை சேர்ந்த, 5 பேர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்த நிலையில், 3 பேர் மர்மமான முறையில் இறந்ததால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதைத்தவிர ராயக்கோட்டை சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமப்புறங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

rayakottai,corona virus,traders,shops,closure,vulnerability ,ராயக்கோட்டை, கொரோனா வைரஸ்,வணிகர்கள்,கடைகள்,மூடல்,பாதிப்பு

குறிப்பாக ராயக்கோட்டை தக்காளி மண்டி மற்றும் மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக ராயக்கோட்டை பகுதியில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுபட்டு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளும் பொருட்டு வருகிற 1-ந் தேதி முதல் 10-ந்தேதி வரையில் ராயக்கோட்டை ஊராட்சியில் உள்ள அனைத்து கடைகளையும் முழுமையாக மூட ராயக்கோட்டை அனைத்து வணிகர்கள் முடிவு செய்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளான மருந்து, பால் கடைகளை தவிர மற்ற கடைகளை மூட வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.

Tags :
|