Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிகரிக்கிறது கொரோனா; நாள்தோறும் 1200 முதல் 1300 வரை பாதிப்பு

அதிகரிக்கிறது கொரோனா; நாள்தோறும் 1200 முதல் 1300 வரை பாதிப்பு

By: Nagaraj Mon, 24 Aug 2020 10:11:02 AM

அதிகரிக்கிறது கொரோனா; நாள்தோறும் 1200 முதல் 1300 வரை பாதிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் 1200 முதல் ஆயிரத்து 1300 பேர் வரை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை மேலும் குறைப்பதற்காக சென்னை நகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 5,975 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,79,385 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 6,047 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 3,19,327 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 97 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 6,517 ஆக உயர்ந்துள்ளது.

corona vulnerability,social activists,increase,chennai ,கொரோனா பாதிப்பு, சமூக ஆர்வலர்கள், அதிகரிப்பு, சென்னை

மாவட்ட வாரியான பட்டியலில், சென்னையில் இதுவரை 1,24,071 பேருக்கு கொரோனா உறுதியாகியிருந்தது. நேற்று மேலும் 1,298 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,25,389 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, சென்னையில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் 1200 முதல் ஆயிரத்து 1300 பேர் வரை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பாதிப்பை மேலும் குறைப்பதற்காக சென்னை நகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, காய்ச்சல் முகாம்கள், களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று காய்ச்சல் கண்டறிதல் போன்ற பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 7 நாட்களில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனா பாதிப்பு 1.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் கடந்த 7 நாட்களில் 12 மண்டலங்களில் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும், இரண்டு மண்டலங்களில் பாதிப்பு குறைந்துள்ளது. மீண்டும் சென்னையில் ஊரடங்கு கட்டுப்பாட்டை கடுமையாக்கினால் மட்டுமே, கொரோனா பாதிப்பு குறையும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags :