Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சீனாவின் மிக முக்கியமான 2 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது

சீனாவின் மிக முக்கியமான 2 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது

By: Nagaraj Tue, 04 Aug 2020 5:13:56 PM

சீனாவின் மிக முக்கியமான 2  செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது

சீனாவின் 2 முக்கிய செயலிகளுக்கும் தடை... ஏற்கெனவே சீன நிறுவனங்களுக்கு சொந்தமான 59 செயலிகள் தடை செய்யப்பட்ட நிலையில் தற்போது சீனாவின் அதிமுக்கிய செயலிகளான பாய்டு (Baidu) மற்றும் வெய்போ (Weibo)வையும் தடை விதித்துள்ளது இந்தியா.

இந்திய இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, கடந்த மாதம் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளைத் தடை செய்த மத்திய அரசு, தொடர்ந்து அவற்றின் குளோன்களாக செயல்பட்டதாகக் கூறி ஜூலை 27ம் தேதி மேலும் 47 செயலிகளுக்கும் தடை விதித்தது.

அந்த 47 செயலிகளின் பட்டியலில் சீனாவின் பிரபல செயலிகளான பாய்டு மற்றும் வெய்போவும் இடம்பெற்றுள்ளன. தற்போது அவை இரண்டும் பிளே ஸ்டோர் மற்றும் ஐபோன் ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

chinese processors,india,ban,important ,சீன செயலிகள், இந்தியா, தடை விதிப்பு, முக்கியமானவை

பாய்டு மற்றும் வெய்போ செயலிகள் இரண்டும் சீனாவின் முக்கியமான இணையதளங்கள் ஆகும். இவற்றில் பாய்டு சீனாவின் அதிமுக்கிய தேடுபொறி இயந்திரம் என்பது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும், தினந்தோறும் 174 மில்லியனுக்கும் அதிகமானோர் பாய்டு தேடுபொறியைப் பயன்படுத்துகின்றனர்.

சினோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் வெய்போ செயலியானது சீனாவின் முன்னணி சமூக இணையதளமாகப் பயன்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் 500 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. இதில் இந்தியா - சீனா இடையே நல்லுறவை ஏற்படுத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கணக்கு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|