Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது; பிரதமர் மோடி தகவல்

இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது; பிரதமர் மோடி தகவல்

By: Nagaraj Thu, 08 Oct 2020 9:06:19 PM

இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது; பிரதமர் மோடி தகவல்

2019-20 ம் நிதியாண்டில் இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு 23 சதவீதம் அதிகரித்துள்ளது. மருந்து பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என பிரதமர் மோடி கூறி உள்ளார்.

இந்தியா-கனடா, வணிக உறவுகள் இருநாட்டு பொருளாதாரம் குறித்து வீடியோ கான்பரன்சிங் முறையில் பிரதமர் மோடி பேசியதாவது: எந்த ஒரு நாட்டிலும் முதலீடு செய்வதற்கு முன்பாக ஜனநாயகம் இருக்கிறதா அரசியல் ஸ்திரத்தன்மை உள்ளதாக என்பதை காணுங்கள். இந்தியா இன்று மட்டுமல்ல நாளைக்கும் வலிமையாக இருக்கும். இதுவரையில் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருந்து பொருட்களை விநியோகித்து உள்ளது.

அன்னிய நேரடி முதலீட்டில் மேலும் பல தளர்வுகள் தரப்பட்டுள்ளது. முதலீடுகளை அதிகரிப்பதற்காகவே அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ளது.

prime minister,exports,investment,traders,poor people ,பிரதமர், ஏற்றுமதி, முதலீட்டு, வணிகர்கள், ஏழை மக்கள்

தொழில் துவங்க ஏற்ற நாடுகளின் பட்டியலில் கடந்த ஐந்தாண்டுகளில் இந்தியா மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. 2019-20 ம் நிதியாண்டில் இந்தியாவின் அன்னிய நேரடி முதலீடு 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

முதல் ஆறு மாதங்களில் இந்தியா 20 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீட்டை ஈர்த்துள்ளது. ஏழை மக்கள் மற்றும் சிறிய வணிகர்களுக்கு என சிறப்பு பொருளாதார தொகுப்புக்குள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலகட்டத்தை அமைப்பு ரீதியான மாற்றங்களை கொண்டு வருவதற்கு பயன்படுத்தி கொண்டுள்ளோம் . இவ்வாறு அவர் கூறினார்.

Tags :