Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

By: Monisha Tue, 22 Dec 2020 2:55:26 PM

விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரம்- அமைச்சர் விஜயபாஸ்கர்

புதிய வகை கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் வேகமாக பரவி வருவது அந்த நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் வைரஸ் பரவல் காரணமாக வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள தலைநகர் லண்டன், கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அந்த நாட்டுக்கான விமான சேவையை இன்று நள்ளிரவு முதல் டிசம்பர் 31-ம் தேதி வரை தடை செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

uk,corona virus,fear,curfew,air service ,இங்கிலாந்து,கொரோனா வைரஸ்,அச்சம்,ஊரடங்கு,விமான சேவை

இந்த நிலையில் விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போது, விமான நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் கடந்த பத்து நாட்களில் பிரிட்டன் வழியாக பல நாடுகளில் இருந்து சென்னை வந்த 1,088 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Tags :
|
|
|