Advertisement

கைபர் பக்துங்வா மாகாண எம்.எல்.ஏ., கொரோனாவுக்கு பலி

By: Nagaraj Fri, 05 June 2020 09:29:00 AM

கைபர் பக்துங்வா மாகாண எம்.எல்.ஏ., கொரோனாவுக்கு பலி

கொரோனா பாதித்து பாகிஸ்தானில் எம்எல்ஏ மரணமடைந்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கைபர் பக்துங்வா மாகாண எம்எல்ஏ மியான் ஜாம்செட் காகாகேல். இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்துள்ளார். பாகிஸ்தானில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது.

நேற்று ஒரே நாளில் அங்கு 4,132 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்து 400-ஐ கடந்துள்ளது.


mla,kill,corona,treatment,hospital ,எம்எல்ஏ, பலி, கொரோனா, சிகிச்சை, ஆஸ்பத்திரி

இந்நிலையில் கைபர் பக்துங்வா மாகாண சட்டசபை உறுப்பினரான மியான் ஜாம்செட் காகாகேல் (65) கொரோனா தொற்றால் மரணம் அடைந்தார். இவர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தொற்று உறுதியானது.

அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உடல் நிலை மோமானதால் கடந்த 3 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிந்து மாகாண மந்திரி கொரோனாவால் பலியானது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|