Advertisement

கொண்டாட்டங்கள் இல்லாத நிலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா

By: Nagaraj Tue, 11 Aug 2020 12:02:57 PM

கொண்டாட்டங்கள் இல்லாத நிலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா

ஆண்டு தோறும் வட மாநிலங்களில் உள்ள முக்கிய கோவில்களில் விடிய விடிய கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்தாண்டு அந்த கொண்டாட்டங்கள் இல்லாத நிலை உள்ளது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் எளிமையாக கொண்டாட தயாராகி வருகின்றனர். இன்று மாலை கிருஷ்ண ஜெயந்தி பூஜைகளை வீடுகளில் நடத்த உள்ளனர்.

கிருஷ்ணரின் ஜன்ம பூமியான உத்தரப்பிரதேச மாநில மதுரா நகரம் எப்போதும் கிருஷ்ண ஜெயந்திக்கு திருவிழாக் கோலம் பூண்டு களை கட்டும். நள்ளிரவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சரியாக பன்னிரண்டு மணிக்கு கண்ணனை தங்கத் தொட்டிலில் போட்டு பூமழை பொழிய தாலாட்டு லாலி பாடுவர். கண்ணனுக்கு பாலாபிஷேகம், தயிர் அபிசேகம் போன்றவை நடைபெறும்.

krishna jayanti festival,bajna,worship,art performances ,கிருஷ்ண ஜெயந்தி விழா, பஜனை, வழிபாடு, கலை நிகழ்ச்சிகள்

இதேபோல் அமிர்தசரஸ் பொற்கோவிலை அடுத்து அந்த ஊரில் புகழ் பெற்ற துர்க்கையம்மன் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் கிருஷ்ணன் சிலைக்கு சிறப்பு அலங்காரங்கள், ஆராதனைகள் என்று பக்தர்கள் விடிய விடிய கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி மகிழ்வர்.

குஜராத் மாநிலம் வடோதராவில் பள்ளிகளில் கண்ணன் பிறந்த நாளை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்களில் எவ்வித கொண்டாட்டமும் நடத்த முடியாத நிலை. இதனால் கலை நிகழ்ச்சிகள், பஜனை, வழிபாடு என்று எதுவும் இல்லாமல் வீடுகளிலேயே மக்கள் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுகின்றனர்.

Tags :
|