Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிர்சில்லா ஏரி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான நீர் மேலாண்மை பாடமாகிறது

சிர்சில்லா ஏரி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான நீர் மேலாண்மை பாடமாகிறது

By: Nagaraj Sat, 30 May 2020 11:36:14 AM

சிர்சில்லா ஏரி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான நீர் மேலாண்மை பாடமாகிறது

நீர் மேலாண்மை பாடம்... தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சிர்சில்லா ஏரி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கான நீர் மேலாண்மை பாடமாக அமைகிறது.

நாடு முழுவதிலும் ஐ.ஏ.எஸ் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் இளம் அதிகாரிகளுக்கு உ.பி., மாநிலம் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் நிர்வாகத்திறன் குறித்த பயிற்சி வழங்கப்படும். உலகம் முழுவதிலும் உள்ள சிறந்த கொள்கைகள் மற்றும் நிர்வாக மாதிரிகள் குறித்து தேசிய பயிற்சி அகாடமியில் கற்று தரப்படுகிறது.

water projects,research topic,lake,ias officials ,நீர் திட்டங்கள், ஆராய்ச்சி தலைப்பு, ஏரி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

தற்போதைய சூழ்நிலையில் நீர் மேலாண்மை குறித்த பாடங்களில் தெலுங்கானா மாநிலத்தின் சிர்சில்லா ஏரியின் நிர்வாகத்தை பயிற்சி அதிகாரிகளுக்கான ஆயு்வு மாதிரியாக உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் ஏரி நீர் ஆறு மீட்டர் அளவிற்கு அதிகரித்து உள்ளது. முன்னதாக சிர்சில்லா மாவட்டம் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இருந்தது. நீர் பாதுகாப்பு மேலாண்மைக்கு பின்னர் அவை நீர் பாதுகாப்பில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

water projects,research topic,lake,ias officials ,நீர் திட்டங்கள், ஆராய்ச்சி தலைப்பு, ஏரி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

அது மட்டுமல்லாது சிர்சில்லா மாவட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நீர் மேலாண்மை மற்றும் தூய்மைபிரிவிற்காக என்ஆர்இஜிஏ விருதுகளை பெற்றுள்ளது. இதுகுறித்து சிர்சில்லா பகுதியை சேர்ந்த மாநில கைத் தொழில்துறை அமைச்சர் கே.டி.ராமராவ் கூறியதாவது:

தெலுங்கானா கொள்கைகள் மற்றும் மாதிரிகள் தேசிய அளவில் அனைவராலும் பாராட்டப்படுகின்றன. கிராமங்களில் ஆண்டு முழுவதும் நீர்மட்டத்தை உறுதி செய்வதற்காக அனைத்து கிராமங்களிலும் உள்ள ஏரிகள் நீரோடைகளுடன் இணைக்கப்படும். என்றார்.

தெலுங்கானாவின் நீர் திட்டங்கள் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி தலைப்புகளாக மாறும் என மாநில முதல்வர் சந்திரேசேகரராவ் கூறி வருவதாக அமைச்சர் கூறினார்.

Tags :
|