Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 'எச் 4' விசா பணி அங்கீகாரத்திற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி ஜோ பைடனுக்கு கடிதம்

'எச் 4' விசா பணி அங்கீகாரத்திற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி ஜோ பைடனுக்கு கடிதம்

By: Karunakaran Sat, 19 Dec 2020 08:57:43 AM

'எச் 4' விசா பணி அங்கீகாரத்திற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி ஜோ பைடனுக்கு கடிதம்

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு ‘எச்1 பி’ என்கிற பணியாளர் விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். அதேபோல் ‘எச்1 பி’ விசாதாரர்களின் மனைவி அல்லது கணவன் அமெரிக்காவில் பணியாற்றுவதற்கு ‘எச் 4’ விசா வழங்கப்படுகிறது.

ஆனால் ‘எச்1 பி’ மற்றும் ‘எச் 4’ விசாக்களால் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுவதாக கூறி ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் விசா நடைமுறையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தது. அந்த வகையில் ‘எச் 4’ விசாதாரர்களுக்கான பணி அங்கீகாரத்திற்கான காலக்கெடுவை டிரம்ப் நிர்வாகம் குறைத்தது.

letter,joe biden,h4 visa,authorization deadline ,கடிதம், ஜோ பிடன், எச் 4 விசா, அங்கீகார காலக்கெடு

இதனால் ‘எச் 4’ விசாதாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய பெண்கள் ஆவர். இந்நிலையில் ‘எச் 4’ விசா மீதான டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்து, அவர்களின் பணி அங்கீகாரத்திற்கான காலக்கெடுவை நீட்டிக்கக்கோரி அமெரிக்க எம்.பி.க்கள் 60 பேர் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த கடிதத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி.க்களான ராஜ கிருஷ்ணமூர்த்தி, பிரமீளா ஜெயபால், அமி பேரா உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். அந்த கடிதத்தில், டிரம்ப் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட செயலாக்க சிக்கல்களை நமது உள்நாட்டு பாதுகாப்பு துறையின் புதிய மந்திரி சரி செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம் என எம்.பி.க்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags :
|