Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தானே மாவட்டத்தில் நேற்று இடி மின்னலுடன் மழை; மின்னல் தாக்கி 26 பேர் காயம்

தானே மாவட்டத்தில் நேற்று இடி மின்னலுடன் மழை; மின்னல் தாக்கி 26 பேர் காயம்

By: Monisha Thu, 22 Oct 2020 12:42:30 PM

தானே மாவட்டத்தில் நேற்று இடி மின்னலுடன் மழை; மின்னல் தாக்கி 26 பேர் காயம்

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வரும் நிலையில் தானே மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இடி மின்னலுடன் மழை பெய்வதால் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த மூன்று நாட்களுக்கு புனே, நாசிக், ரத்னகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தானே மாவட்டத்தின் கிராமப்புறங்களில் நேற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் 22 பேர் காயமடைந்தனர். இதன்மூலம் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது.

maharashtra,thane district,thunder,lightning,rain,injury ,மகாராஷ்டிரா,தானே மாவட்டம்,இடி,மின்ன,மழை,காயம்

நேற்று இடி மின்னலுடன் பெய்த மழையால் தானே மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ஒருவர் பலியானார், 4 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. விளைபயிர்கள் வயலில் மூழ்கி அழுகி உள்ளன. இந்த ஆண்டு இயல்பு அளவைவிட 16 சதவீதம் கூடுதல் மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

Tags :
|