Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

By: Nagaraj Wed, 18 Nov 2020 9:58:58 PM

கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கனமழை பெய்ய வாய்ப்பு...கடந்த சில தினங்களாகவே தென் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வங்க கடலில் நிலை கொண்டு உள்ள காற்றழுத்த சூழல் காரணமாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அரபிக்கடல் பகுதியில் உருவாகி உள்ளதால் கன்னியாகுமரி லட்சதீவு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

heavy rain,depression,dead sea,research center ,கனமழை, காற்றழுத்த தாழ்வு, குமரிக்கடல், ஆய்வு மையம்

மேலும் இந்த புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் குமரிக்கடலில் நிலை கொண்டு உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை என 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Tags :