Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வண்ணாரப்பேட்டை-விம்கோ நகருக்கும் இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் துவக்கம்

வண்ணாரப்பேட்டை-விம்கோ நகருக்கும் இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் துவக்கம்

By: Monisha Thu, 10 Dec 2020 2:18:57 PM

வண்ணாரப்பேட்டை-விம்கோ நகருக்கும் இடையே மெட்ரோ ரயில் சேவை விரைவில் துவக்கம்

சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெருக்கடியை குறைப்பதற்காக மெட்ரோ ரயில் சேவை திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் கட்டமாக சென்னை விமான நிலையம்-வண்ணாரப்பேட்டை, பரங்கிமலை-சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் பயணிகள் சேவை தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

பயணிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து வண்ணாரப்பேட்டை-விம்கோ நகருக்கும் இடையே ஒன்பது கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு சுரங்க ரயில் நிலையங்களும் ஆறு உயர்மட்ட ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மின்சார கேபிள்கள், தொலைத்தொடர்பு சிக்னல் கருவிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

transport,crisis,metrorail,passengers,work ,போக்குவரத்து,நெருக்கடி,மெட்ரோரயில்,பயணிகள்,பணி

இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் பணிகள் பெருமளவு முடிந்துவிட்டது. தற்போது மின் கேபிள்கள், சிக்னல்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

டிசம்பர் மாத இறுதியில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெறும். அதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்ற பிறகு பாதுகாப்பு ஆணையரின் ஆய்வுக்குப் பின் ரயில்கள் இயக்கப்படும் என அவர் கூறினார்.

வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் மெட்ரோ ரயில் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டதும் பயணிகள் நேரடியாக விம்கோநகர் மற்றும் விமான நிலையத்திற்கு இடையே உள்ள 32 கிலோ மீட்டர் தூரத்தை எளிதில் கடக்க முடியும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள்.

Tags :
|