Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கன அடியாக சரிந்தது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கன அடியாக சரிந்தது!

By: Monisha Sat, 26 Sept 2020 5:24:07 PM

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கன அடியாக சரிந்தது!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் பெய்த மழையால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைகளின் பாதுகாப்பு கருதி அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது. கடந்த 21-ந் தேதி முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. பின்னர் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று பிற்பகல் 100 அடியை எட்டியது.

அணையில் இருந்து காவிரியில் 20 ஆயிரம் கன அடியும், கால்வாயில் 850 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து நேற்று 35 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில் இன்று 27 ஆயிரம் கன அடியாக சரிந்தது. அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

mettur dam,cauvery,canal,delta,farmers ,மேட்டூர் அணை,காவிரி,கால்வாய்,டெல்டா,விவசாயிகள்

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 100.02 அடியாக இருந்தது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

நடப்பாண்டில் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. 308 நாட்களுக்கு பிறகு அதே மாதம் 16-ந் தேதி மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு கீழே சரிந்தது. தற்போது கர்நாடகாவில் பெய்த தொடர் மழையாலும், அங்குள்ள அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீராலும் நடப்பாண்டில் முதன் முறையாக மேட்டூர் அணை 100 அடியை தாண்டி உள்ளது.

66-வது ஆண்டாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
|
|