Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமெரிக்காவில் சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசனை - மைக் பாம்பியோ அறிவிப்பு

அமெரிக்காவில் சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசனை - மைக் பாம்பியோ அறிவிப்பு

By: Karunakaran Wed, 08 July 2020 10:00:00 AM

அமெரிக்காவில் சீன செயலிகளை தடை செய்வது குறித்து ஆலோசனை - மைக் பாம்பியோ அறிவிப்பு

லடாக் எல்லையில் கடந்த மாதம் 15-ஆம் தேதி இந்திய-சீன ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 43 வீரர்கள் படுகாயம் அல்லது மரணம் அடைந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுளது. இந்த மோதல் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வந்தது.

இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிக்-டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. தற்போது இந்தியாவை தொடர்ந்து டிக்டாக் போன்ற பல சீன செயலிகளுக்கு தடை விதிக்க அமெரிக்காவும் இறங்கியுள்ளது.

chinese apps,america,mike pompeo,ban ,சீன செயலிகள், அமெரிக்கா, மைக் பாம்பியோ, தடை

இதுகுறித்து வெளியுறுவத்துறை மந்திரி மைக் பாம்பியோ கூறுகையில், டிக்டாக் உள்ளிட்ட செயலிகள் மூலம் பயனாளர்களின் தகவல்களை சீனா உளவு பார்க்கிறது. இந்த செயலிகளை தடை செய்வது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் சீன செயலிகளுக்கு தடை விதிப்பது தொடர்பான தகவல்களை அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிப்பார் என்று கூறினார்.

ஏற்கனவே டிக் டாக், ஹலோ,விப்ரோ வீடியோ போன்ற மூன்று செயலுகளுக்கு மட்டும் இந்தியா விதித்த தடை காரணமாக சீனாவுக்கு 48 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. தற்போது அமெரிக்காவும் தடை விதித்தால் பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்படும். அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு 46 மில்லியன் பேர் பயனாளர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :