Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாநகர பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம்; 10 கோடி ரூபாய் வருவாய்

மாநகர பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம்; 10 கோடி ரூபாய் வருவாய்

By: Monisha Fri, 11 Sept 2020 5:22:38 PM

மாநகர  பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர்  பயணம்; 10 கோடி ரூபாய் வருவாய்

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மாநகர போக்குவரத்து பேருந்து உள்பட தமிழகம் முழுவதும் அனைத்து வகை பேருந்து போக்குவரத்திற்கும் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மாதம் செப்டம்பர் 1-ந்தேதியில் இருந்து தமிழகத்தில் மாநகர போக்குவரத்து உள்பட மாவட்டங்களுக்குள்ளும் பேருந்து போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டது. அதன்பின் கடந்த திங்கட்கிழமையில் இருந்து மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

city,bus,transport,passenger,travel ,மாநகரம்,பேருந்து,போக்குவரத்து,பயணிகள்,பயணம்


இந்நிலையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட பேருந்துகளில் இதுவரை 1.01 கோடி பேர் பயணித்துள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், நாள் ஒன்றுக்கு 2,400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், நாள் ஒன்றுக்கு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்கின்றனர். இதன் மூலம் இதுவரை 10 கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது என்று மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|