Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் சிக்கினர்

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் சிக்கினர்

By: Karunakaran Fri, 07 Aug 2020 1:45:34 PM

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்டோர் சிக்கினர்

இந்தியாவில் தற்போது வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளது. இதனால் 5 மாநிலங்களுக்கு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கேரளாவில் பருவகால மழைப்பொழிவை முன்னிட்டு பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்துள்ளது.

கேரளாவில் காங்கிரஸ் எம்.பி.யாக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்ட வயநாடு தொகுதிக்கு உட்பட்ட வயநாடு, இடுக்கி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருவதால், அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் மற்றும் குடிசை பகுதிகள் ஆகியவை நீரால் சூழ்ந்துள்ளன. சாலையெங்கும் நீர் நிரம்பி குளம்போல் உள்ளதால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

landslide,heavy rains,kerala,idukki ,நிலச்சரிவு, பலத்த மழை, கேரளா, இடுக்கி

கொரோனா பாதிப்பினால் கேரளாவில் மக்கள் அவதியடைந்து வரும் நிலையில், மறுபுறம் மழையால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது, கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ராஜமலை பகுதியில் திடீரென இன்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். மழை வெள்ளம் காரணமாக ராஜமலை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


Tags :
|