Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 25 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 10 லட்சம் பேருக்கு இ-பாஸ் கிடைத்தது

25 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 10 லட்சம் பேருக்கு இ-பாஸ் கிடைத்தது

By: Nagaraj Sat, 20 June 2020 11:22:25 AM

25 லட்சம் பேர் விண்ணப்பித்ததில் 10 லட்சம் பேருக்கு இ-பாஸ் கிடைத்தது

10 லட்சம் பேருக்கு அனுமதிச் சீட்டு... சென்னையில் முழு பொது முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், நகரத்தில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களில் மட்டும் சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்ல சுமாா் இணைய வழியில் 10 லட்சம் பேர் அனுமதிச் சீட்டுகளைப் பெற்றுள்ளனா்.

தமிழகத்திலேயே சென்னை மற்றும் பக்கத்து மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை நகரப் பகுதிகளான ராயபுரம், திரு.வி.க. நகா், கோடம்பாக்கம் ஆகியவற்றில் தினமும் நோய்த் தொற்றின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் இருந்து வருகிறது..

10 lakhs,permit,chennai,neighboring districts ,10 லட்சம் பேர், அனுமதி சீட்டு, சென்னை, பக்கத்து மாவட்டங்கள்

நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் முழு பொது முடக்கம் செய்யப்பட இருப்பதாக கடந்த வாரங்களில் செய்தி பரவியது. குறிப்பாக சமூக ஊடகங்களில் இந்தச் செய்திகள் வேகமாகப் பரவின. இந்தச் செய்திக்கு சேலத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வா் பழனிசாமி மறுப்பு தெரிவித்தாலும், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்தது.

இதனிடையே, மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் ஆலோசிக்க உள்ளதாக வெளியான செய்திகளால் முழு பொது முடக்கத் தகவல்கள் உண்மையே என பொது மக்கள் கருதத் தொடங்கினா். இதையடுத்து, கடந்த ஒரு சில வாரங்களாக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியது. இந்த எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டியுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

10 lakhs,permit,chennai,neighboring districts ,10 லட்சம் பேர், அனுமதி சீட்டு, சென்னை, பக்கத்து மாவட்டங்கள்

இதுகுறித்து, அரசுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மற்றும் பிற பக்கத்து மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கடந்த சில வாரங்களில் மட்டும் இணைய வழி அனுமதிச் சீட்டு கோரி விண்ணப்பிப்போரில் சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களைச் சோந்தவா்களே அதிகமாக இருந்தனா்.

கடந்த சில வாரங்களில் மட்டும் இந்த எண்ணிக்கை சுமாா் 25 லட்சம் வரையில் இருந்தது. ஆனால் அவா்களில் தகுதியுள்ள சுமாா் 10 லட்சம் பேருக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags :
|