Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஒரு பக்கம் கொரோனா மிரட்டுது... மறுபக்கம் குடிநீர் பிரச்னை வாட்டுது

ஒரு பக்கம் கொரோனா மிரட்டுது... மறுபக்கம் குடிநீர் பிரச்னை வாட்டுது

By: Nagaraj Sun, 28 June 2020 6:18:51 PM

ஒரு பக்கம் கொரோனா மிரட்டுது... மறுபக்கம் குடிநீர் பிரச்னை வாட்டுது

ஒரு பக்கம் கொரோனா மிரட்டுது... மறுபக்கம் குடிநீர் பிரச்னை வாட்டுது என்று மதுரை மக்கள் நொந்து கொள்கின்றனர்.

மதுரையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை அங்கு ஆயிரத்து 703 பேர் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 218 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 548 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்து 135 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

corona,madurai,drinking water shortages,people suffering ,கொரோனா, மதுரை, குடிநீர் தட்டுப்பாடு, மக்கள் வேதனை

இதுகுறித்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்களே மதுரையில் 80 சதவீத கொரோனா பாதிப்பு ஏற்பட காரணம் என கூறியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால், வைகை அணையின் நீர்மட்டம் 34 அடியாக குறைந்து விட்டது. இதனால் மதுரைக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. அணைக்கு வினாடிக்கு 5 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 72 கனஅடி தண்ணீர் திறக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மழை பெய்தால் மட்டுமே மதுரை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Tags :
|