Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரத்து குறைவால் பெரிய வெங்காயம் விலை கடும் உயர்வு; ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை

வரத்து குறைவால் பெரிய வெங்காயம் விலை கடும் உயர்வு; ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை

By: Monisha Wed, 21 Oct 2020 09:17:21 AM

வரத்து குறைவால் பெரிய வெங்காயம் விலை கடும் உயர்வு; ஒரு கிலோ ரூ.90-க்கு விற்பனை

தமிழகத்தில் பெரிய வெங்காயம் உற்பத்தி மிகவும் குறைவு. எனவே, சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தேவையான காய்கறிகளை விற்பனை செய்யும் மார்க்கெட்டாக திகழும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் கொண்டு வரப்படுகிறது. இந்த ஆண்டு மழை காரணமாக வெங்காயம் அழுகி போனதால் பெரிய வெங்காய வரத்து குறைந்து உள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஒரு நாளைக்கு 60, 70 லாரிகளில் வெங்காயம் வருவது வழக்கம். இதன் மூலம் ஒரு நாளைக்கு 1,400 டன் முதல் 1,500 டன் வரை வெங்காயம் கொண்டு வருவது வழக்கம். ஆனால், தற்போது 30 லாரிகளில் 600 முதல் 750 டன் வெங்காயம் மட்டுமே வருகிறது.

onion,rain,price up,market,koyembedu ,வெங்காயம்,மழை,விலை உயர்வு,மார்க்கெட்,கோயம்பேடு

இதனால், கடந்த வாரம் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் நேற்று 'கிடு கிடு' வென உயர்ந்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி சந்தையில் இது ரூ.80-90 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று சாம்பார் வெங்காயம் கோயம்பேடு மார்க்கெட்டில் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி சந்தையில் சில்லரைக்கு ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் மாதம் புது வெங்காயம் வரும் வரை வெங்காயத்தின் விலையானது உயரத்தான் செய்யும்.

ஊட்டியில் பெய்த மழை காரணமாக கேரட் விலையும் அதிகரித்து உள்ளது. கோயம்பேட்டில் ஒரு கிலோ கேரட் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று மழையில் முருங்கை பூக்கள் உதிர்ந்து விட்ட காரணத்தால் முருங்கைக்காய் விலையும் அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|
|
|