Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டிசம்பர் மாதம் வரை வெங்காயம் விலை உயர்ந்து கொண்டேதான் இருக்கும்

டிசம்பர் மாதம் வரை வெங்காயம் விலை உயர்ந்து கொண்டேதான் இருக்கும்

By: Nagaraj Wed, 21 Oct 2020 10:20:27 AM

டிசம்பர் மாதம் வரை வெங்காயம் விலை உயர்ந்து கொண்டேதான் இருக்கும்

விலை உயர்ந்து கொண்டேதான் இருக்கும்... டிசம்பர் மாதம் வரையில் வெங்காயம் விலை உயர்ந்து கொண்டுதான் இருக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான வெங்காயம் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து தற்போது மிகவும் குறைந்துள்ளதால், கடந்த ஒரு வாரங்களாக வெங்காயத்தின் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது.

அதிலும் குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து வெங்காயம் அதிக அளவு தமிழ் நாட்டிற்கு வரும். அம்மாநிலங்களிலும் மழை காரணமாக வெங்காயம் சாகுபடி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வரத்து குறைந்துள்ளது. அதன் காரணமாக கடந்த சில நாட்களாக பெரிய வெங்காயத்தின் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறது.

onions,sales,price increase,december ,வெங்காயம், விற்பனை, விலை உயர்வு, டிசம்பர் மாதம்

அதனால் கடந்த வாரம் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பெரிய வெங்காயம் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற வெளி சந்தைகளில் 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெளிச் சந்தைகளில் சில்லறையாக சாம்பார் வெங்காயம் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டிசம்பர் மாதம் புது வெங்காயம் வரும் வரையில் வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டுதான் இருக்கும்.

Tags :
|
|