Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவுக்கு 9,868 பேர் மட்டுமே சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

சென்னையில் கொரோனாவுக்கு 9,868 பேர் மட்டுமே சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

By: Monisha Thu, 24 Sept 2020 4:53:17 PM

சென்னையில் கொரோனாவுக்கு 9,868 பேர் மட்டுமே சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கல் அதிகரித்து வருகிறது. இருப்பினும் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,58,594 ஆக உள்ளது. தற்போது மருத்துவமனையில் 9,868 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

chennai,corona virus,infection,treatment,kills ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,151
அண்ணா நகர் - 1,114
தேனாம்பேட்டை - 868
தண்டையார்பேட்டை - 664
ராயபுரம் - 793
அடையாறு - 827
திரு.வி.க. நகர் - 849
வளசரவாக்கம் - 732
அம்பத்தூர் - 729
திருவொற்றியூர் - 216
மாதவரம் - 367
ஆலந்தூர் - 663
பெருங்குடி - 439
சோழிங்கநல்லூர் - 279
மணலி - 150

Tags :