Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 14ம் தேதி சபரிமலையில் நடை திறப்பு; பக்தர்கள் தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு

வரும் 14ம் தேதி சபரிமலையில் நடை திறப்பு; பக்தர்கள் தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு

By: Nagaraj Wed, 10 June 2020 09:43:14 AM

வரும் 14ம் தேதி சபரிமலையில் நடை திறப்பு; பக்தர்கள் தரிசனத்திற்கு இன்று முதல் முன்பதிவு

இன்று முன்பதிவு செய்யலாம்... கேரளாவில் நேற்று கோவில்கள் திறக்கப்பட்டன. சபரிமலை நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. சுவாமி தரிசனத்திற்கான முன்பதிவு இன்று (10ம் தேதி) துவங்குகிறது.

திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவில், குருவாயூர் கோவில் உட்பட அனைத்து கோவில்களும் நேற்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டன. வாசலில் கை கழுவ தண்ணீர், சோப்பு வைக்கப்பட்டிருந்தது. காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்ட பின், பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு நேரத்தில், 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஊழியர்கள் முகக் கவசம் மற்றும் கையுறை அணிந்திருந்தனர். பிரசாத விநியோகம் நடைபெறவில்லை. சபரிமலை நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. இங்கு ஒரு மணி நேரத்தில், 200 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

sabarimalai,darshan,reservation,e-pass,from today ,சபரிமலை, தரிசனம், முன்பதிவு, இ-பாஸ், இன்று முதல்

சன்னிதானத்தில் ஒரு நேரத்தில், 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை 4 முதல் மதியம் 1 மணி வரையும், பின்னர் மாலை 4 மணி முதல் இரவு, 11 மணி வரை தரிசனம் உண்டு. 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. சபரிமலை தரிசனத்திற்கு, கேரள போலீசின் இணையதளத்தில், இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.

வெளிமாநில பக்தர்கள், 'கோவிட் 19 நெகட்டிவ் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். கேரளா செல்வதற்கான இ - பாஸ் பெற வேண்டும். ஆனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவுக்காக வரும் 28 வரை சபரிமலை நடை திறந்திருக்கும்.

sabarimalai,darshan,reservation,e-pass,from today ,சபரிமலை, தரிசனம், முன்பதிவு, இ-பாஸ், இன்று முதல்

இதேபோல் திருப்பதியில் நாளை முதல், பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, நேரடி தரிசன டோக்கன் முன்பதிவுகள் இன்று துவங்க உள்ளது. திருப்பதியில் உள்ள சீனிவாசம், விஷ்ணுநிவாசம் மற்றும் அலிபிரியில் உள்ள பூதேவி காம்பளக்சில் மொத்தம், 18 கவுண்டர்களில் காலை 5 மணி முதல் தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இங்கு, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 10 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை.

தரிசனத்திற்கு முன்தினம், பக்தர்கள், தங்கள் ஆதார் அட்டை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை ஏதேனும் ஒன்றை அளித்து, டோக்கன் பெற்றுக் கொள்ளலாம்' என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Tags :
|