Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடகத்தில் புத்தாண்டில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

கர்நாடகத்தில் புத்தாண்டில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

By: Monisha Sun, 20 Dec 2020 08:17:52 AM

கர்நாடகத்தில் புத்தாண்டில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

கர்நாடகத்தில் புத்தாண்டில் இருந்து 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. 2-வது ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்குகிறது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் கர்நாடகத்தில் கொரோனா பரவலுக்கு மத்தியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால் நடப்பு கல்வியாண்டுக்கான பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகளை திறக்க அரசு முடிவு செய்தது. இதையடுத்து, கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

karnataka,schools,colleges,online class,pre warning ,கர்நாடகம்,பள்ளிகள்,கல்லூரிகள்,ஆன்லைன் வகுப்பு,முன் எச்சரிக்கை

முதலில் நிபுணர் குழுவின் பரிந்துரைகள் குறித்து அதிகாரிகளுடன், எடியூரப்பா ஆலோசனை நடத்தினார். அதாவது பொதுத்தேர்வு நடைபெறுவதால் 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு வகுப்புகளை ஜனவரி 1-ந்தேதி தொடங்கலாம் என்று நிபுணர் குழுவினர் தெரிவித்திருந்தனர். அந்த குழுவினர் பரிந்துரையின்படியே கர்நாடகத்தில் புத்தாண்டில் இருந்து 10-ம் வகுப்பு மற்றும் பி.யூ.சி. 2-வது ஆண்டுக்கான வகுப்புகளை தொடங்குவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

மேலும், 6-ம் வகுப்பில் இருந்து 9-ம் வகுப்பு வரை வித்யாகமா திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்துவதற்கும் நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்திருந்தனர். அதன்படி, 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை வித்யாகமா திட்டத்தின் கீழ் புத்தாண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால், அதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Tags :