Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீலகிரியில் இரவு முழுவதும் பெய்த மழை; முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டும் அதிகாரிகள்

நீலகிரியில் இரவு முழுவதும் பெய்த மழை; முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டும் அதிகாரிகள்

By: Nagaraj Wed, 18 Nov 2020 1:10:46 PM

நீலகிரியில் இரவு முழுவதும் பெய்த மழை; முன்னேற்பாடுகளில் தீவிரம் காட்டும் அதிகாரிகள்

இரவு முழுவதும் பெய்த மழை... நீலகிரியில் வடகிழக்கு பருவ மழை துவங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், ஆகிய பகுதிகளில் அதிகமான மழை பெய்துள்ளது.

இன்று (நவ.,18) காலை, 7.00 மணி நிலவரப்படி சராசரி மழை அளவு, 30.5 மி.மீ., பதிவாகியுள்ளது. இதில், குன்னூர், கோத்தகிரி, மஞ்சூரில் இரவு முழுவதும் காற்றுடன் மழை பெய்தது. மேற்கண்ட பகுதிகளில் உள்ள கிராமப்புறப் பகுதிகளிலும் சராசரி மழை அளவு, 25 மி.மீ.,க்கு அதிகமாக மழை பெய்துள்ளது.

overnight,rain,fire department,life,nature ,இரவு முழுவதும், மழை, தீயணைப்பு துறை, வாழ்க்கை, இயல்பு

மழை தொடர்ந்து பெய்து வருவதால், நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்தந்த வட்டத்தில், 15 பொக்லைன் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை மற்றும் அந்தந்த உள்ளாட்சி பேரிடர் அமைப்பினர் தடுப்பு நடவடிக்கையில், தயார் நிலையில் உள்ளனர்.

தற்போது வரை மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. மஞ்சூர் - இத்தலார் சாலை, கிண்ணக்கொரை அப்பர் பவானி, கோர குந்தா சாலை, கைக் காட்டி சாலைகளில் சிறிய அளவில் ஏற்பட்ட மண் சரிவு உடனுக்குடன் சீரமைக்கப்பட்டது. கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்டர் அருகே நள்ளிரவில் விழுந்த மரத்தை குன்னூர் தீயணைப்பு துறையினர் உடனடியாக அகற்றினர்.

Tags :
|
|