Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடைமேடைக் கட்டணம் உயர்வு

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடைமேடைக் கட்டணம் உயர்வு

By: Nagaraj Fri, 11 Sept 2020 7:42:10 PM

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடைமேடைக் கட்டணம் உயர்வு

ரயில் நடை மேடைகட்டணம் உயர்வு... கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பெங்களூரு ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் நடைமேடைக் கட்டணம் ரூ.50ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொது போக்குவரத்து செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

walkway,fare,rise,bangalore,corona ,நடைமேடை, கட்டணம், உயர்வு, பெங்களூரு, கொரோனா

இந்நிலையில் பொதுமக்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கர்நாடக மாநிலம் பெங்களுரூ ரயில் நிலையத்தில் நடைமேடைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி நடைமேடைக் கட்டணம் ரூ.10 யிலிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டண உயர்வு கே.எஸ்.ஆர் பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் யேசவந்த்பூர் ரயில் நிலையங்களுக்குப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|